மேலும் செய்திகள்
வீர அழகர் கோயிலில் திருக்கல்யாணம்
07-Aug-2025
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று பட்டத்தரசி கிராம மண்டகபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு ஆடி பிரமோற்ஸவ விழா ஜூலை 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆக. 5ம் தேதி இரவு வீர அழகர், சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. நேற்று தீர்த்த வாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளைகுதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு அலங்கார குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பின்னர் அபிஷேக ஆராதனை,சுவாமி வீதி உலா நடந்தது.நாளை 11ம் தேதி உற்ஸவர் சாந்தியுடன் ஆடி பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது.
07-Aug-2025