உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாத்தமங்கலத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை

சாத்தமங்கலத்தில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை

இளையான்குடி: தாயமங்கலம் அருகே உள்ள சாத்தமங்கலத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடிநீர் வராத காரணத்தினால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சாத்தமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிற நிலையில் இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.இந்நிலையில் பழுது காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யாத காரணத்தினால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாத்தமங்கலத்தில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கிராம மக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !