உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மருத்துவமனையில் டாக்டர்கள் தட்டுப்பாடு

சிவகங்கை மருத்துவமனையில் டாக்டர்கள் தட்டுப்பாடு

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.இம்மருத்துவமனையில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் என 209க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் உள்ளன. 180க்கும் குறைவான மருத்துவர்களே பணிபுரிந்து வருகின்றனர்.20க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அறுவை சிகிச்சையில் 20 பணியிடத்துக்கு 10 பேர் தான் உள்ளனர். பொது மருத்துவத்தில் 5 பணியிடம், மகப்பேறு மருத்துவத்தில் 5 பணியிடம், ரேடியாலஜி பிரிவில் பேராசிரியர், இணை பேராசிரியர், கண் சிகிச்சை பிரிவில் பேராசிரியர், கார்டியாலஜி, நெப்ராலஜி, நியூராலஜி பிரிவுகளில் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது.இங்கு வரும் மருத்துவர்கள் உடனடியாக மாறுதலில் சென்று விடுகின்றனர். மருத்துவமனை தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிலை நீடிக்கிறது. மருத்துவமனை நிர்வாகம் டாக்டர்கள் பற்றாக்குறையை சரி செய்ய முடியாத சூழலில் உள்ளது. மருத்துவ கண்காணிப்பாளர் பொறுப்பு சிவக்குமார் கூறுகையில், கார்டியாலஜிஸ்ட், நியூராலஜிஸ்ட் பணியிடம் நீண்ட காலம் காலியாக உள்ளது. அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசுதான் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்றார். மக்கள் நலன் கருதி டாக்டர் காலியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை