உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வசதி இல்லாத தேரேந்தல்பட்டி

வசதி இல்லாத தேரேந்தல்பட்டி

திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் தேரேந்தல்பட்டியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். கோட்டையிருப்பு ஊராட்சியைச் சேர்ந்த குக்கிராமம் தேரேந்தல்பட்டி. இங்கு 50க்கும் குறைவான வீடுகள் உள்ளன. இக்கிராமத்தில் அரசு திட்டப்பணிகள் நடந்து பல ஆண்டுகளாகி விட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ரோடு பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. குளியல் தொட்டிக்கு நீர் வசதி இன்றி பயன்படுத்த முடியவில்லை. தெரு விளக்கு வசதி போதாது, குறைந்த மின்அழுத்தம் என்று பல பிரச்னைகளை அடுக்குகின்றனர். இதனால் இங்கிருந்து பலர் வெளியேறி நகர்ப்புறம் செல்ல துவங்கி விட்டனர். தற்போது இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் என்பதால் 30 ஏக்கர் அளவில் பாசன வசதி பெற கண்மாயை தூர்வார கோருகின்றனர். தற்போது நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க சீரான மின்சார விநியோகத்தையும் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை