உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் கோயில் சுற்றுச்சுவர் பகுதி பார்க்கிங்காக மாறியதால் பக்தர்கள் பாதிப்பு

திருப்புத்துார் கோயில் சுற்றுச்சுவர் பகுதி பார்க்கிங்காக மாறியதால் பக்தர்கள் பாதிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துார்-காரைக்குடி ரோட்டில் திருத்தளிநாதர் கோயில் சுற்றுச்சுவர் அருகில் வேன்கள் நிறுத்தப்படுகிறது. கோயிலுக்கு செல்லும் பாதசாரிகளுக்கு இது இடையூறாக உள்ளது.இதனால் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பழைய அலுவலக கட்டட வளாகத்தை வேன் நிறுத்தமாக பயன்படுத்த முன்பு வேன் ஓட்டுநர்கள் கோரியிருந்தனர். ஆனால் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. பஸ் ஸ்டாண்ட் அருகில் காரைக்குடி ரோட்டில் பொதுப்புணித்துறை அலுவலகம் அருகில் பழைய தாசில்தார் அலுவலக கட்டடம் பாழடைந்துள்ளது. அந்த அலுவலகக்கட்டடத்தில் அலுவலகம் இயங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தற்போது அக்கட்டடம் பாழடைந்து குப்பைக்கொட்டும் இடமாக உள்ளது. புதர் மண்டி,விஷ ஜந்துக்களின் வாழ்விடமாகவும், சுகாதாரக் கேடாகவும் உள்ளது. இந்த இடத்திலுள்ள இடிந்த கட்டுமானங்களை அகற்றி சுத்தம் செய்து வேன் நிறுத்தத்திற்கு மாற்று இடமாக அளிக்கலாம். கோயில் சுற்றுச்சுவர்அருகில் பாதசாரிகளுக்கான நடைபாதையாக டைல்ஸ் பதித்து உருவாக்கலாம் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி