உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருவள்ளுவர் நாள் கருத்தரங்கு 

திருவள்ளுவர் நாள் கருத்தரங்கு 

சிவகங்கை : சிவகங்கையில் உலக திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் நாள் விழா நடைபெற்றது.திருவள்ளுவர் படத்திற்குமாலை அணிவித்து மரியாதை செய்தனர்.சகுபர் நிஷா பேகம் வரவேற்றார். ஓய்வு தலைமை ஆசிரியர் கண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுந்தரமாணிக்கம், துணை தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். முத்தையா சிறப்பு வகித்தார்.மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்சுந்தரராஜன், லயன்ஸ் சங்க தலைவர் முத்துக்குமரன், உதவி இயக்குனர் ஓய்வு (தோட்டக்கலை) இளங்கோவன், ஓவியர்முத்துக்கிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் ராம்பிரபாகர், ஆசிரியர் முத்துக்காமாட்சி, மருத்துவ கல்லுாரி நிர்வாக கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணன், உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் பேசினர். வள்ளுவத்தை பாடுவோம் என்ற தலைப்பில் கவியரங்கம் புலவர் காளிராஜா தலைமையில் நடந்தது. ஆசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ