மணிமுத்தாறு ஆற்றில் முட்புதர்கள்: விவசாயிகள் புகார்
தேவகோட்டை: தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் பல கி.மீ., துாரத்திற்கு முட்புதர்கள் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த ஆற்றில் பருவ மழை காலங்களில் நீர்வரத்து இருக்கும். இந்த நீரை நம்பியே ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மேலும் குடியிருப்பு பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்படும். இந்த ஆற்றில் பல கி.மீ., துாரத்திற்கு முட்புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. ஆற்றின் குறுக்கே செல்லும் மேம்பாலம், தரைப்பால பகுதியிலும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. பொதுப்பணித்துறையினர் ஆற்றில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.