உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவு பெற்றதை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக அக்.31ம் தேதி அனுக்கை, விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தியுடன் முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து 4நாட்கள் 6 கால யாக சாலை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.நேற்று காலை 6:00 மணி முதல் பல்வேறு பூஜை நடைபெற்று பூர்ணாகுதி முடிந்ததும் காலை 9:00 மணிக்கு யாக சாலைகளில் இருந்த புனித நீர் அடங்கிய கடங்களை சிவாச்சார்யார்கள் மூலஸ்தானம்,ராஜகோபுரம்,மாறநாயனார் மற்றும் பரிவார தெய்வ கோபுரங்களுக்கு கொண்டு சென்று கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை,அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சிவகங்கை மதுராந்தகி நாச்சியார், எம்.எல்.ஏ., தமிழரசி,வி.கே.டி.,டவர் உரிமையாளர் தனசேகரன், தேவஸ்தான கண்காணிப்பாளர்கள் சீனிவாசன், சரவணன்,இளையான்குடி ஆயிர வைசிய சபை தலைவர் சதாசிவம், செயலாளர் கோபி,பொருளாளர் பார்த்திபன், துணைத் தலைவர் கோவிந்தராஜன், துணைச் செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள், மலர் மெடிக்கல் மற்றும் குரூப்ஸ் உரிமையாளர் கதிரேசன், சென்னை பேஷன்ஸ் உரிமையாளர் பாண்டி, பி.பி., பெட்ரோல் பங்க் உரிமையாளர் கோவிந்தன், மாற நாயனார் அடியார் கூட்டம் ஹரி கேசவன், பீப்புல்ஸ் பர்னிச்சர் உரிமையாளர் உஸ்மான் அலி,ஏ.கே.,பிசியோதெரபி கிளினிக் டாக்டர்.காமராஜ், சன் டோர்ஸ் உரிமையாளர் சிவா, பாலன் பந்தல் உரிமையாளர் இளையராஜா,ஏ.எம்.,பேக்கரி உரிமையாளர் தென்னரசு, ஸ்ரீ சங்கையா பெயின்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் உரிமையாளர் சரத்குமார், தாயமங்கலம் கவுதமி கண்ணன் பூக்கடை உரிமையாளர் கண்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை