உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் கார் மோதி உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் போலீஸ் கார் மோதி உயிரிழப்பு

திருப்புவனம்: போலீஸ் கார் மோதியதில், டூ வீலரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்தார். ஆத்திரமடைந்த மக்கள் மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், அனஞ்சியூரில் தங்கம்மாள் என்ற மூதாட்டி இறந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்க, மதுரை மாவட்டம், சிட்டம்பட்டியில் இருந்து உறவினர் பிரசாத், 25, மனைவி சத்யா, 20, மகன் தஷ்வந்த், 4, ஆகியோருடன் டூ - வீலரில் சென்றார். இறுதி சடங்கில் பங்கேற்று விட்டு, மீண்டும் டூ - வீலரில் மதுரை நோக்கி சக்குடி வழியாக மூவரும் சென்றனர். சோனை ஈஸ்வரி, 25, என்பவரும் டூ - வீலரில் அமர்ந்து பயணித்தார். அனஞ்சியூர் விலக்கு அருகே வளைவில் நேற்றிரவு, 7:20 மணிக்கு சென்ற போது, எதிரே ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு சிவகங்கை இன்ஸ்பெக்டர் ஜெயராணி, போலீஸ் காரில் வந்தார். காரை டிரைவர் பால முருகன் ஓட்டினார். டூ - வீலர் மீது மோதிய கார், வலது புறம் சரிவில் இறங்கி நின்றது. இதில், பிரசாத் துாக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சத்யா, தஷ்வந்த், சோனைஈஸ்வரி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சத்யா, தஷ்வந்த் வழியிலேயே இறந்தனர். சோனை ஈஸ்வரி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, மகன் இறந்ததால், உறவினர்கள் சம்பவ இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், மதுரை - -பூவந்தி -- சிவகங்கை ரோட்டில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., பார்த்திபன் உறவினர்களை சமாதானப்படுத்தினர். விபத்து குறித்து பூவந்தி போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே திருப்புவனம் அரசு மருத்துவமனையிலும் பிரசாத் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ