திருப்புத்துார் அரசு பஸ்சில் உயரமான படிக்கட்டால் அவதி
திருப்புத்துார்: திருப்புத்துாரில் அரசு பஸ்சில் உயரமான படிக்கட்டால் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் பஸ்சில் ஏறமுடியாமல் சிரமப்படுகின்றனர். திருப்புத்துாரிலிருந்து கோட்டையிருப்பு, கருப்பூர், ஆலம்பட்டி, முறையூர், சிங்கம்புணரிக்கு 3ஏ டவுன் பஸ் செல்கிறது. இந்த பஸ்சில் செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு படிக்கட்டில் ஏற வேண்டியுள்ளது. வழக்கத்திற்கு மாறான உயரத்தில் பஸ்சின் படிக்கட்டு உள்ளதால் வயதானவர்கள் ஏறும் போது தசைப்பிடிப்புக்கு உள்ளாகி சிரமப்படுகின்றனர். பெண்கள் ஏற முடியாமல் தவிக்கின்றனர். இறங்கும் போது சில மூதாட்டிகள் தடுமாறி விழுந்து விடுகின்றனர். பஸ்சின் படிக்கட்டை சரியான அளவிற்கு இறக்கி வைக்க பயணிகள் கோரியுள்ளனர். ஆனால் இதுவரை மாற்றப்படவில்லை.