மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
10 hour(s) ago
பயிற்சி முகாம்
10 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
10 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
10 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
10 hour(s) ago
திருப்புத்துார் : திருப்புத்தூர் நகரின் புராதான கோட்டைச்சுவர் கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயில் திருப்பணியில் பராமரிக்கப்பட்டது.திருப்புத்துார் அருகே கருப்பர் கோயில் கோட்டைச்சுவர் 4 அடி அகலம், 25 அடி உயரமானது. கருப்பட்டி, கடுக்காய், சுண்ணாம்பு, சித்துக்கற்களால் கட்டப்பட்டது. இக்கோட்டை சுவர் பிரிட்டிஷார், மருதுபாண்டியர்களுக்கும் எதிராக 1801 ல் நடந்த போரில் பீரங்கி குண்டுகளால் சிதறடிக்கப்பட்டது. அதில் மிஞ்சிய பகுதிகள் தான் தற்போது கம்பீரமாக நிற்கிறது. ஆனால் அவற்றை யாரும் பாதுகாக்க முன்வராமல் சிதிலமடைந்து சிதைந்து விட்டது. தற்போது எஞ்சியுள்ள சுவர் கருப்பர் கோயில் பிரதான நுழைவாயிலில் உள்ளது. தற்போது நடைபெறும் திருப்பணியில் இக்கோட்டைச்சுவரில் இருந்த மண் கசடுகள், செடி, கொடிகள் அகற்றப்பட்டு தேவையான இடங்களில் மண், சுண்ணாம்பு கலவை பூசி சீரமைத்து வருகின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago