மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் திருக்கல்யாணம்
05-Jun-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் வைகாசி விசாக விழா பத்தாம் நாளில் சுவாமி தெப்பத்தில்எழுந்தருளி சீதளி குளத்தில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாள் விழா நிறைவடைந்தது.குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா 10 நாட்கள் நடைபெறும். தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடந்தது. நேற்று பத்தாம் நாளில் தெப்பத்தை முன்னிட்டு காலை 10:30 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில்சோமஸ்கந்தர், அஸ்திரத்தேவர் சீதளிகுளத்திற்கு புறப்பட்டு படித்துறை எழுந்தருளினர். சிவாச்சார்யாரால் அஸ்திரத்தேவருக்கு அபிஷேகம் நடந்து தீர்த்தவாரி நடந்தது. கோயிலுக்கு சுவாமி புறப்பாடு ஆகி மூலவர், பஞ்சமூர்த்திகளுக்கு பஞ்சமுக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு நடந்தது. மாலை 6:30 மணிக்கு சுவாமி-அம்பாள் சீதளிகுள தெப்ப மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் தீபாராதனை நடந்தது.தொடர்ந்து சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி தெப்பம் சீதளிக்குளத்தை வலம் வந்தது. தெப்பக்குளக்கரைகளில் பக்தர்கள்கூடி சுவாமி தரிசனம் செய்தனர். மும்முறை வலம் வந்த பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து கோயில் கொடி மரத்தின் அருகில் சேர்க்கை ஆனது. கொடியிறக்கம் நடந்து காப்பு அவிழ்த்து வைகாசி பெருந்திருவிழா நிறைவுஅடைந்தது. -
05-Jun-2025