மேலும் செய்திகள்
பா.ஜ.,வினர் அஞ்சலி
17-Aug-2025
திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின், படத்திற்கு மாலை அணிவித்து த.மா.கா., தலைவர் ஜி.கே., வாசன் அஞ்சலி செலுத்தினார். திருப்புவனம் த.மா.கா., நகர் துணை தலைவர் வி.முருகேசன் இல்ல விழாவிற்கு வருகை தந்த அவரை மாநில தொண்டரணி தலைவர் அயோத்தி வரவேற்றார். பின்னர் செப்., 4 ல் நடக்க உள்ள நகர் துணை தலைவர் முருகேசனின் இல்லத்தில் அவரது திருமணத்திற்காக அவரது மகனை வாழ்த்தினார். பின்னர், மடப்புரம் அஜித்குமார் இல்லத்திற்கு சென்ற வாசன், அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் அளித்தார். நிகழ்வில் முன்னாள் எம்.பி., உடையப்பன், மாவட்ட தலைவர் கே.கே., பாலசுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.கே., ராஜேந்திரன், நகர் தலைவர் பாரத்ராஜா, பேரூராட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வரி சூரசிங்காரம், வட்டார தலைவர் மாங்குடி மணி, மடப்புரம் முன்னாள் தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். /////
17-Aug-2025