உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கானாடுகாத்தானில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கானாடுகாத்தானில் குவிந்த சுற்றுலா பயணிகள்

காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானின் புத்தாண்டு மற்றும் விடுமுறை நாளையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக செட்டிநாட்டுப் பகுதி விளங்குகிறது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் செட்டிநாட்டுக்கு வந்து செல்கின்றனர்.தற்போது தொடர் விடுமுறை, புத்தாண்டையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாபயணிகள் செட்டிநாடு பகுதிக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் சுற்றுலா வரும் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் கானாடு காத்தானில் இல்லை.சுற்றுலாபயணிகளுக்கு போதிய தங்கும் இடம், கழிப்பிட வசதி, பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜன 02, 2025 09:56

செட்டிநாட்டில் அமைந்துள்ளள கானாடுகாத்தான் அரண்மனை தனியாருக்கு சொந்தமானது. செட்டிநாடு அரசர் அவர்களுக்கு சொந்தம். எவரிடம் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை. சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு அதிகம்


சமீபத்திய செய்தி