மேலும் செய்திகள்
வானவில் மன்ற கூட்டம்
31-Oct-2024
சிவகங்கை : தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் காளையார்கோவில் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன அரங்கத்தில் நடந்தது.முதல்வர் மனோன்மணியம் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் வீரபாண்டி முன்னிலை வகித்தார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி வரவேற்றார். முன்னாள் மாநிலப் பொருளாளர் ஜீவானந்தம் அறிமுக உரையாற்றினார். முகாமில் நீரினால் பரவும் நோய்கள், நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுக்திகள், நீர் சார்ந்த சுகாதாரம், பொது மருத்துவம், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் அனைவருக்கும்மானது என்ற தலைப்புகளில் சேவற்கொடியோன், கோபிநாத், காளிதாஸ், பிரபு, சாஸ்தா சுந்தரம், ஆரோக்கியசாமி கருத்தாளர்களாக ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான வழிமுறைகளை செயல் விளக்கம் அளித்தனர். துணை முதல்வர் சாருமதி பேசினார். கிளைச் செயலாளர் அலெக்ஸாண்டர் துறை நன்றி கூறினார்.
31-Oct-2024