பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக், சுயநிதிப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பாடங்களைக் கற்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு கருத்தாளர்களைக் கொண்டு நாளை முதல் மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கூட்டரங்கில் பயிற்சி வகுப்பு பள்ளிகல்வி துறை சார்பில் நடைபெற உள்ளது. செப்.23 ஆங்கிலம், செப்.24 தமிழ், செப்.25 கணிதம், செப்.26 அறிவியல், அக்.8 சமூக அறிவியல், காலை 9:30 முதல் 11 மணி வரை முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பாட வாரியாக 100 மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக 100 சதவீதம் அனைவரையும் தேர்ச்சி பெற வைப்பது என அனைத்து விதமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.