உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆசிரியர், பயிற்றுநர்களுக்கு பயிற்சி

ஆசிரியர், பயிற்றுநர்களுக்கு பயிற்சி

சிவகங்கை : சிவகங்கையில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு 'நலம் நாடி செயலி' குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களது வாழ்வியல் திறனை மேம்பட செய்வதற்கான பாடத்திட்டம் வகுத்து ,எண்ணும் எழுத்தும் புத்தகங்கள் வழங்கி, சிறப்பு கல்வி மையத்தில் சேர்க்கை செய்து 33 சிறப்பு பயிற்றுநர்கள், 9 இயன்முறை மருத்துவர்கள் மூலம் தொடர் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.இது குறித்த பயிற்சி வகுப்பு கல்வித்துறை இணை இயக்குனர் ஆனந்தி முன்னிலையில் நடந்தது. சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பேகம் ஏற்பாட்டை செய்திருந்தார்.* சிவகங்கையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடந்தது. இம்மாவட்டத்தில் 16 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ளது.இதில் விவசாய அறிவியல், கணக்கியல் மற்றும் தணிக்கை, அலுவலக மேலாண்மை, செயலகப்பணி பயிற்சி, அடிப்படை மின் பொறியியல், எந்திரபொறியியல் போன்ற பாடப்பிரிவுகளில் 297 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கான இணையவழி பயிற்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு, ஒருங்கிணைப்பாளர் ஜெசிமா பேகம் ஏற்பாட்டை செய்திருந்தார். இப்பயிற்சி மாணவரிடம் தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆளுமை, நிர்வாக திறன், பணியிட பண்பாடு, தொழில் நுணுக்கத்தை கற்றுக்கொள்ள நன்மை உடையதாக இருக்கும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி