மரக்கன்று நடும் விழா
சிவகங்கை: சிவகங்கை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அறிவொளி மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து சாலை ஓரம், பொது இடம், அரசு அலுவலக வளாகங்கள், சிறைச்சாலைகளில் மரக்கன்று நடப்பட்டு வருவதாக தெரிவித்தனர். ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தில்முரளி, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராதிகா, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.