உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் மருதுபாண்டியருக்கு அஞ்சலி

காளையார்கோவிலில் மருதுபாண்டியருக்கு அஞ்சலி

சிவகங்கை: காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குரு பூஜையை யொட்டி அரசியல் கட்சி பிர முகர்கள், அமைப்பினர் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர். மருதுபாண்டியர் நினைவிடத்திற்கு அறக்கட்டளை சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர். பா.ஜ., சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா, மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், துணை தலைவர்கள் ராஜசம்பத், கந்தசாமி, சுகனேஸ்வரி, தேசிய பொதுகுழு சொக்க லிங்கம், காங்., மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, எம்.எல்.ஏ., மாங்குடி, சிவகங்கை நகர் தலைவர் விஜயகுமார், தி.மு.க., சார்பில் சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., செந்தில் நாதன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் சிவாஜி, பழனிசாமி, அருள் ஸ்டீபன், செல்வமணி, ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், சிவகங்கை நகர் செய லாளர் ராஜா பங்கேற்றனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மருதுபாண்டியருக்கு ஆறரை கிலோவில் வெள்ளி கவசத்தை வழங்கினார். மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டி, மாணவரணி செயலாளர் மாரிமுத்து, தே.மு.தி.க., மாவட்ட தலைவர் திருவேங்கடம், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் பாண்டி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மதுரை ஆதினம், உள்ளிட்டோர் மரியாதை செய்தனர். எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி