உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

திருப்பாச்சேத்தி: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் வாகன ஓட்டிகளிடம் பணம், அலைபேசி ஆகியவற்றை அரிவாளை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.தாலிகுளம் கிராமத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுனர் மாசாணம் 47, மதுரையில் இருந்து டூவீலரில் திரும்பிய போது லாடனேந்தல் பாலம் ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர் இவரை வழிமறித்து அரிவாளால் தாக்கி பணம்,அலைபேசி ,டூவீலர் ஆகியவற்றை பறித்து தப்பினர்.அடுத்து துாதை விலக்கில் நடந்து சென்ற ஒருவரிடம் அலைபேசியையும் பறித்துள்ளனர்.கல்லுாரணி விலக்கு அருகே டூவீலரில் சென்ற பரசுராமன் என்பவரை வழிமறித்து கையில் வெட்டிவிட்டு அவரிடம் இருந்த அலைபேசியையும் பறித்து சென்றனர்.திருப்பாச்சேத்தி, திருப்புவனம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் விசாரணையில் மாத்துாரை சேர்ந்த ரஞ்சித் 22, சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மூவேந்தன் 21, வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை