உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்ற இருவர் கைது 6 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்ற இருவர் கைது 6 கிலோ கஞ்சா பறிமுதல்

சிவகங்கை : சிவகங்கை இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., செல்வபிரபு உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு டி.புதுார் கண்மாய்கரை பகுதிக்கு சென்றனர். அங்கு நின்ற ஒருவரை விசாரிக்க முயன்ற போது அந்த நபர் ஓடினார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் கீழவாணியங்குடி குட்டை சங்கர் 30 என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மானாமதுரை ரோட்டில் பெரியகோட்டை விலக்கு அருகே ரோந்து சென்றனர். அப்போது ஒருவர் பேக்குடன் நின்றார். அவரை சோதனை செய்ததில் அவர் சாமியார்பட்டி தனுஷ்ராஜா 19 என்பதும் அவரது பேக்கில் 3 கிலோ கஞ்சா இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி