உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயி வீட்டில் திருட்டு: இருவர் கைது

விவசாயி வீட்டில் திருட்டு: இருவர் கைது

சிவகங்கை; மதகுபட்டி அருகே கீழப்பூங்குடி விவசாயி முருகன் மனைவி பூங்கோதை. இவர் வீட்டை பூட்டிவிட்டு நவ., 22 ல் வெளியூர் சென்றிருந்தனர். அப்போது இவரது வீட்டு கதவின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றனர்.மதகுபட்டி போலீசில் பூங்கோதை புகார் அளித்தார். தனிப்படை போலீசார் அலவாக்கோட்டை அருகே ரோந்து சென்றபோது, மதுரை மாவட்டம், அம்மன்கோவில்பட்டி பழனிச்சாமி மகன் கண்ணன் 24, கொங்கம்பட்டி அப்துல்லா மகன் பக்ருதீன் 31 ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஸ்மார்ட் டி.வி., 9 கிராம் தங்க நகை, வெள்ளி செயினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ