மேலும் செய்திகள்
தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு
22-Jan-2025
சிவகங்கை:சிவகங்கை அருகே நடந்த கார் விபத்தில் இருவர் பலியாகினர்.சிவகங்கை, வேலாயுதசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன், 65. இவர், நேற்று முன்தினம் அதே பகுதி சந்துரு என்பவருடன் காரில் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனுார் அருகே உள்ள பிடாரிசேரியில் இருந்து உறவினர்களை சிவகங்கையில் நடைபெற்ற தைப்பூச விழாவிற்காக அழைத்து வந்தார். காரை சந்துரு ஓட்டினார்.இரவு, 11:30 மணிக்கு சிவகங்கை அருகே மானாமதுரை திருப்புத்துார் சுற்றுச்சாலையில், மதுரை ரோடு ஜங்ஷன் பகுதியில் கார் வந்தபோது, 40 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நடந்து சென்றது தெரியாமல், அவர் மீது மோதி பின்னர் சாலையோரத்தில் கார் கவிழ்ந்தது. இதில், மனநிலை பாதிக்கப்பட்டவரும், கார் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நாகராஜனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
22-Jan-2025