மேலும் செய்திகள்
டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
18-Sep-2024
டூவீலர் விபத்தில் வாலிபர் பலி
19-Sep-2024
திருப்புத்துார் : திருப்புத்துாரில் நேற்று இரு இடங்களில் நடந்த டூ வீலர் விபத்தில் ஒருவர் இறந்தார். இருவர் காயம் அடைந்தனர்.பொன்னாங்குடியைச் சேர்ந்த அழகு மகன் வெள்ளைச்சாமி52. இவர் திருப்புத்துார் சிவகங்கை ரோட்டில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். நேற்று காலை 10:30 மணிக்கு வெள்ளைச்சாமி கடையிலுள்ள குப்பையை கொட்டுவதற்காக ரோட்டை கடந்துள்ளார்.அப்போது திருப்புத்துாருக்கு நாராயணன் 22. என்பவர் ஒட்டி வந்த டூ வீலர் மோதியது. இதில் காயமடைந்த வெள்ளைச்சாமி இறந்தார். டூவீலர் ஓட்டிய நாராயணன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.குருந்தம்பட்டை சேர்ந்த மணிகண்டபிரபு, ஜெயப்பிரியன் இருவரும் கீரணிப்பட்டி சென்று விட்டு டூ வீலரில் ஹெல்மெட் அணியாமல் திரும்பினர். நேற்று காலை 10:00 மணி அளவில் என்.புதூர் அருகில் வரும் போது புதுக்கோட்டை ரோட்டில் நாய் குறுக்கே புகுந்ததில் டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
18-Sep-2024
19-Sep-2024