உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் திருடியவர் கைது

டூவீலர் திருடியவர் கைது

மானாமதுரை: மானாமதுரை அருகே பட்டப்பகலில் ரோட்டோரமாக நிறுத்தியிருந்த டூவீலரை திருடி கொண்டு சென்றவரை அப்பகுதியில் இருந்த மக்கள் பிடித்து நன்றாக கவனித்து போலீசில் ஒப்படைத்தனர். மானாமதுரை அருகே மூங்கிலூரணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் டவுன் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு அருகே உள்ள நூலகத்திற்கு முன்பாக தனது டூவீலரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்ற நிலையில் விருதுநகரைச் சேர்ந்த கருப்புசாமி மகன் வினோத் 27, என்பவர் அந்த டூவீலரை திருடி தள்ளிக்கொண்டு சென்று கொண்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை பிடித்து நன்றாக கவனித்து மானாமதுரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் டூவீலர் திருடி சென்றவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ