உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

 துார்வாரப்படாத கழிவுநீர் கால்வாய்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிராமத்தின் நடுவே ஓடும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இவ்வொன்றியத்தில் வகுத்தழுவன்பட்டி ஊராட்சி தலைவணங்காம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 100 அடி தூரத்திற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் குப்பை, மண் சேர்ந்து மூடபட்டு கிடக்கிறது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் வீடுகள் முன்பாக குட்டை போல் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். கால்வாயை முறையாக தூர்வாரி சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி