உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சீரமைக்கப்படாத இணைப்பு ரோடு

சீரமைக்கப்படாத இணைப்பு ரோடு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் சிவபுரிபட்டி ஊராட்சி மட்டிக்கண்மாய் பெரிய மதகு பகுதியில் இருந்து காளாப்பூர் வையாபுரிபட்டி சாலைக்கு செல்லும்இணைப்பு ரோடு பல நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் கிராவல் மண் கொட்டப்பட்டு கற்கள் பரப்பப்பட்ட நிலையில் பணிகள் அப்படியே விடப்பட்டது. இந்நிலையில் இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, காளாப்பூர், குமரத்தகுடிப்பட்டி உள்ளிட்ட விவசாயிகளுக்கு இச்சாலை பெரிய உதவியாக உள்ளது. இந்த ரோட்டைசீரமைத்து விரைந்து தார் ரோடாக மாற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி