உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஊர்வலம்  

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஊர்வலம்  

சிவகங்கை: டில்லியில் விவசாயிகளிடம் மத்திய அரசு அறிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிவகங்கையில் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் டூவீலர் பயணம் நடந்தது.சிவகங்கை ராமசந்திரா பூங்கா முன் தொடங்கிய டூவீலர் ஊர்வலத்தை விவசாய சங்க மாநில தலைவர் குணசேகரன் துவக்கி வைத்தார்.விவசாய சங்க பிரதிநிதிகள் வீரபாண்டி, ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காமராஜ், விஸ்வநாதன், இந்திய கம்யூ., நகர் செயலாளர் மருது, மாவட்ட துணை செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, சங்கையா, முருகேசன், சகாயம், ஆட்டோ சங்க நகர் செயலாளர் பாண்டி பங்கேற்றனர். டூவீலர் ஊர்வலம் ராமசந்திரா பூங்காவில் துவங்கி, காந்தி வீதி, வழிவிடும் முருகன்கோயில், தெற்கு ரத வீதி வழியாக அரண்மனைவாசலில் நிறைவு பெற்றது. குறைந்த பட்ச விலை உத்தரவாதம், மின் சட்ட மசோதா ரத்து, பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தை முறையாக அமல்படுத்து, தொழிலாளர் நல சட்டங்களை திருத்தாதே என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை