உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முத்தனேந்தலில் எரியாத உயர் மின்கோபுர விளக்கு

முத்தனேந்தலில் எரியாத உயர் மின்கோபுர விளக்கு

மானாமதுரை: முத்தனேந்தல் பஸ் ஸ்டாப் மற்றும் நாடக மேடைக்கு எதிர்புறம் போதிய மின் விளக்குகள் இல்லாத காரணத்தினால் அப்பகுதி இருளில் காணப்பட்டது.2020ம் ஆண்டு எம்.பி., கார்த்தி நிதியின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிதாக உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. கடந்த 3 மாதமாக அந்த உயர் மின் கோபுர விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ள காரணத்தினால் அப்பகுதி முழுவதும் இருளாக காணப்படுகிறது.இரவு நேரங்களில் பஸ் ஸ்டாப்பிலிருந்து இறங்கி ஊருக்குள் செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக எரியாமல் உள்ள உயர் மின் கோபுர விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை