உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத சாலை

பராமரிப்பில்லாத சாலை

காரைக்குடி: சாக்கோட்டை அருகே பனம்பட்டியிலிருந்து சிறுகபட்டி செல்லும், சாலையின் மையப்பகுதி முற்றிலும் சேதமடைந்து வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகபட்டி ஊராட்சியில் முள்ளங்காடு, பனம்பட்டி, பெத்தாச்சி குடியிருப்பு, பீர்க்கலைக்காடு, விளார்க்காடு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சிறுகப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. காரைக்குடி சாக்கோட்டை அறந்தாங்கி உட்பட சுற்றுவட்டார பகுதிக்கு செல்லும் முக்கியச் சாலையாக சிறுகப்பட்டி, பனம்பட்டி சாலை உள்ளது. புதிதாக சாலை அமைக்கப்பட்ட நிலையில், சிறுகப்பட்டிக்கும் பனம்பட்டிக்கும் நடுவில் மட்டும் சாலை போடவில்லை. மாணவர்கள் விவசாயிகள் மழைக்காலங்களில் சாலையை பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி