உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுப்பிக்கப்படாத சங்கந்திடல் ரோடு

புதுப்பிக்கப்படாத சங்கந்திடல் ரோடு

சிவகங்கை: காரைக்குடி அருகே சங்கந்திடல் செல்லும் ரோடு வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக இருப்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கந்திடல் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். காரைக்குடியில் இருந்து தெற்குதெரு, அய்யனார் கோயில் வழியாக சங்கந்திடல் வரை செல்லும் ரோட்டை நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கும் முன் சங்கராபுரம் ஊராட்சியின் கீழ் நிர்வாகம் இருந்த போதும், 3 கி.மீ., துாரமுள்ள இந்த ரோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் புதுப்பிக்கவில்லை. காரைக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்பும், சங்கந்திடல் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு புதுப்பித்தல், தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் கூட செய்யவில்லை. இதனால் அவசரத்திற்கு காரைக்குடி வரும் சங்கந்திடல் மக்கள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிக்கு உள்ளா கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை