உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவபுரிபட்டியில் சீரமைக்கப்படாத சிவன் கோயில் தெப்பக்குளம்

சிவபுரிபட்டியில் சீரமைக்கப்படாத சிவன் கோயில் தெப்பக்குளம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவன் கோயில் தெப்பக்குளம் தண்ணீர் மாசுபட்டு கிடக்கிறது.சிவபுரிபட்டியில் 2000 ஆண்டு பழமையான தர்மசம்வர்த்தினி சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பாக பழமையான தெப்பக்குளம் உள்ளது. இதன் நான்கு புறமும் இருந்த பழைய படித்துறை சிதிலமடைந்ததை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டு கற்களால் படித்துறை கட்டப்பட்டது.தற்போது அதுவும் சிதிலமடைந்து மண் மூடி காணப்படுகிறது. தெப்பக்குளத்தை சுற்றிலும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து கோயிலை மறைக்கும் விதமாக உள்ளது. இங்கு தேங்கி கிடக்கும் தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. புனிதமான கோயில் தெப்பக்குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை