உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ சாந்தி விழா

திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவ சாந்தி விழா

திருப்புத்தூர், : திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவை அடுத்து உற்ஸவ சாந்தி விழா நடந்தது. இக்கோயிலில் பத்துநாட்கள் நவராத்திரிவிழா நடந்தது. தினமும் உற்ஸவராக சிவகாமி அம்பாள், ஸ்ரீதேவி, பூதேவி, திருஞானசம்மந்தர் கொலுமண்டபத்தில் எழுந்தருளினர். நவராத்திரிவிழா அம்பு எய்தலுடன் நிறைவடைந்ததை அடுத்து நேற்று உற்ஸவர் சாந்தி நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு உற்ஸவர்களுக்கு சிவாச்சாரியார்கள் பூஜை செய்தனர். பால், தயிர், திருமஞ்சனம், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !