மேலும் செய்திகள்
பால்குடம் ஊர்வலம்
04-Jun-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள வள்ளி தெய்வானையுடனான முருகன்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காவடி பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.கடந்த வாரம் பக்தர்கள்காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். நேற்று வைகாசி விசாக விழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரை குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் வெள்ளிக்குறிச்சி அருகே செம்பராயனேந்தல் பகுதியில் உள்ள வைகை ஆற்றிலிருந்து பூக்கரகம், மயில், பறவை, இளநீர் காவடிகள் மற்றும் பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். வள்ளி, தெய்வானை, முருகப்பெருமானுக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை செய்து வழிபட்டனர். *இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.
04-Jun-2025