உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேன், டூவீலர் மோதல்: இளைஞர் பலி

வேன், டூவீலர் மோதல்: இளைஞர் பலி

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே வேன், டூவீலர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். கட்டுக்குடிப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி மகன் நந்தகோபால் 22, அந்தமானில் வேலை பார்த்து வந்தவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று நண்பரான அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜா 22, உடன் பொன்னமராவதி சென்று விட்டு திரும்பியுள்ளார். வெள்ளியங்குடிபட்டி அருகே வந்தபோது எதிரே வந்த மினி வேன் மோதியதில் டூவீலரை ஓட்டிய நந்தகோபால் பலியானார். ராஜா காயமடைந்தார். உலகம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ