உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழகத்தில் குற்றச்சம்பவம் அதிகரிக்க போதைப்பொருட்களே காரணம் * சொல்கிறார் வாசன்

தமிழகத்தில் குற்றச்சம்பவம் அதிகரிக்க போதைப்பொருட்களே காரணம் * சொல்கிறார் வாசன்

திருப்புவனம்: ''தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களுக்கு போதைப்பொருட்களே காரணம்,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் நாளிதழ்களில் குற்றச்சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்கள் நடமாட்டமே காரணம். மத்திய அரசு நாட்டின் முக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமை. நடிகர் விஜய் விஷயத்திலும் அது தான் நடந்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஆளும் மற்ற மாநில அரசுகள் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நிதியை பெற்று கொள்கின்றன. அதுபோல தமிழக அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் போது தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகளில் உயிரிழப்போருக்கு ரூ.20 லட்சம் வரை வழங்க வேண்டும். பிரதமர் மோடி குறித்த கேலிச்சித்திரம் நாட்டிற்கே அவமானம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ