காய்கறி விதை தொகுப்பு
சிவகங்கை: வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்தில் காய்கறி விதை தொகுப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் சத்தியா தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்ட திட்டத்தில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இம்மாவட்டத்திற்காக 6 ஆயிரம் எண்ணிக்கையில் காய்கறி விதை தொகுப்பு வழங்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை மற்றும் கொத்தவரை ஆகிய 6 வகையான காய்கறி விதை தொகுப்பு வழங்கப்படும். இதில் பயன் அடைய விரும்புவோர் ஆதார் அட்டை நகல், போட்டோவுடன் இணையதளம் அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம். இணையதளத்தில் ‛‛https://tnhorticulture.tn.gov.in/kit/public/’’ ல் பதிவு செய்யலாம் என்றார். ////