உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவிரி குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் முற்றுகை

காவிரி குடிநீர் குழாய் சேதம் கிராம மக்கள் முற்றுகை

இளையான்குடி: இளையான்குடி அருகே ஆக்கவயல் கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைத்த ரோடு போடும் பணியாளர்களை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இளையான்குடி அருகே உள்ள சூராணத்திலிருந்து சூரியகோட்டை கிராமத்திற்கு ரோடு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் ஆக்கவயல் கிராமத்திற்கு செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயை சேதப்படுத்தியதை தொடர்ந்து கடந்த 2 மாத காலமாக ஆக்கவயல் கிராமத்திற்கு குடிநீர் வராத காரணத்தினால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் வண்டிகளில் வரும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தை வேலை பார்ப்பதற்காக வந்த ரோடு போடும் பணியாளர்களை ஆக்கவயல் கிராம மக்கள் முற்றுகையிட்டு காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயை சரி செய்ய வேண்டுமென்றும், மேலும் பாலம் வேலை பார்க்கும் போது அதற்கு மாற்றாக மாற்றுப்பாதை அமைக்காமல் வெறும் களிமண்ணை மட்டும் கொட்டி இருப்பதால் மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை இருப்பதை கண்டித்தும் கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து சாலைக்கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார்,அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை