உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு விழாவில் தவறாக பாடிய தேசிய கீதம்: கிராம மக்கள் அதிர்ச்சி

அரசு விழாவில் தவறாக பாடிய தேசிய கீதம்: கிராம மக்கள் அதிர்ச்சி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் தேசிய கீதம் தவறாக பாடப்பட்டதால் கிராமமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.தவத்தாரேந்தல் கிராமத்தில் நேற்று மதியம் 12:00 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமில் தவத்தாரேந்தல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 101 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார். மேலும் ரேஷன் கார்டு, பட்டா, மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, திட்ட இயக்குநர் வானதி, கோட்டாட்சியர் விஜயகுமார், எம்.எல்.ஏ., தமிழரசி, பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிவில் தேசிய கீதம் பாட உள்ளூர் சிறுமிகள் வரவழைக்கப்பட்டனர். சிறுமிகள் தேசிய கீதம் பாட தடுமாறவே அருகில் இருந்த மக்கள் தொடர்பு அலுவலர் மைக்கை வாங்கி பாட தொடங்கினார்.அவரும் தடுமாறி ஒருவழியாக தவறாக பாடி தேசிய கீதத்தை நிறைவு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மக்கள் தொடர்பு அலுவலர் பாடும் போது அருகில் 50க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இருந்தும் யாரும் அவருடன் இணைந்து பாடவே இல்லை என்பது வேதனையை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி