மேலும் செய்திகள்
பள்ளத்தால் வர மறுக்கும் பஸ்கள்
02-Jan-2025
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நீண்ட நாட்களாக சேதமடைந்து கண்டு கொள்ளாத கிராமப்புற ரோடுகளால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.சிவகங்கை அருகே நைனாங்குளம் கிராமத்தில் இருந்து துக்கால், ஆத்துார் வழியாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரோடு முழுவதும் சேதமடைந்துஉள்ளது. இந்த ரோடு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அப்போதைய நெடுஞ்சாலை துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் காலத்தில் கிராமப்புற சாலைகள் திட்டத்தில் போடப்பட்டது.கீழக்குளம் வழியாக களத்துார் பெரியகோட்டை செல்லும் ரோட்டில் இருந்து பிரிந்து துக்கால், அரசனி, நைனாங்குளம், துக்கால், ஆத்துார் வழியாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. இந்த பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிவகங்கை வரும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் இந்த ரோட்டை பயன்படுத்திதான் வர வேண்டும்.ரோடு பழுதால் சிரமப்படுகின்றனர்.இதே போல் ஆத்துாரில் இருந்து கோவானுார் முருகன் கோவிலுக்கு செல்லக் கூடிய ரோடும் முழுவதும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
02-Jan-2025