உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மெய்நிகர் ஆய்வக முனையம்

மெய்நிகர் ஆய்வக முனையம்

திருப்புத்துார் : திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி ஐஐடியின் மெய்நிகர் ஆய்வக முனையமாக செயல்பட உள்ளது.மத்திய கல்வி அமைச்சகம் அங்கீகரித்துள்ள இந்த ஆய்வகத்தில் மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட விருக்கிறது. இந்த சிறப்பு திட்டத்தின் முனைய ஒருங்கிணைப்பாளரான கல்விசார் முதன்மையர் மற்றும் துறைத் தலைவருமான கே.சீனிவாசனை கல்லூரி இயக்குநர் கே ஜெயபாரதன், முதல்வர் ப.பாலமுருகன் பாராட்டினர். முதன்மையர்(ஐசிடி) எஸ்.ராபின்சன் பங்கேற்றார்.பேராசிரியர் சீனிவாசன் கூறுகையில், 'இந்த ஆய்வகம் தொலைநிலை பயிற்சி, சுயமாக கற்றல், நவீன பரிசோதனை, சக மாணவர்களுடன் கூட்டு முயற்சி, மற்றும் 24 மணி நேர சேவை ஆகிய அம்சங்கள் கொண்டது. மாணவர்களுக்கு மேம்பட்ட கற்றல் மற்றும் புதிய அனுபவத்துடன் பயிற்சி அளிக்க முடியும். ஐஐடி-டில்லியின் விர்ச்சுவல் லேப்ஸ் முயற்சியால் ஆய்வக சோதனைகளை இணையம் வாயிலாகவும் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !