உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாக்காளர் சிறப்பு திருத்தம் படிவங்கள் 3 நாள் வினியோகம்

வாக்காளர் சிறப்பு திருத்தம் படிவங்கள் 3 நாள் வினியோகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்த படிவங்கள் மூன்று நாட்களில் வாக்காளர்களின் வீடுகளில் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்புத்துார் தாலுகா அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக நடந்த ஓட்டுச்சாவடி அளவிலான அலுவலர், முகவர்களுக்கு பயிற்சி முகாம் நேற்றுடன் நிறைவடைந்தது. வாக்காளர்களை சரிபார்க்க வீடுகளில் படிவங்கள் வழங்கி விளக்கமளிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் முதற்கட்டமாக வாக்காளர்களின் வீடுகளில் சரிபார்ப்பு படிவங்கள் வழங்கப்படுகின்றன. ' தொகுதியில் உள்ள அனைத்து வாக்காளர்களின் வீடுகளிலும் மூன்று நாட்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தொகுதி அலுவலர் சிவபாலன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ