உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் காத்திருப்பு போராட்டம்

காரைக்குடியில் காத்திருப்பு போராட்டம்

காரைக்குடி : அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்குடி மண்டல அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஓய்வு பெற்ற ஊழியர் நல அமைப்பு சார்பில் காத் திருப்பு போராட்டம் நடந்தது. சி.ஐ.டி.யு., மண்டல தலைவர் தெய்வீர பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சேதுராமன் துவக்கி வைத்தார். மண்டல செயலாளர் ஜெகந்நாதன் சிறப்புரை ஆற்றினார். பொது செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் தியாக ராஜன், வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும். 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வுகால பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு அக விலைப்படி வழங்கு, ஓய்வூதியத்தை உயர்த்து உட்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி