மேலும் செய்திகள்
சூப்பர் ரிப்போர்டர் :
08-Nov-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வீடுகள் முன்பு தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் ஊராட்சியில் முறையான கழிவு நீர் கால்வாய் அமைப்பு இல்லாததால் பெரும்பாலான வீடுகள் முன் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. குறிப்பாக வட்டக்கோவில் செல்லும் ரோட்டில் இருபுறமும் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் நீண்ட நாட்கள் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கால்வாய் அமைக்கப்படாததால் இப்பகுதிக்கு வரும் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.அப்பகுதி மக்கள் அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் பெருகும் அதிக கழிவு நீரால் மக்கள் படும் சிரமத்திற்கு அளவே இல்லை. எனவே நிரந்தர தீர்வாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து உரிய பகுதிகளுக்கு கழிவு நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய்களை முழுமையாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Nov-2024