உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு

தெப்பக்குளத்தில் கழிவு நீர் கலப்பு

சிவகங்கை: சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது தெப்பக்குளம். நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள தெப்பக்குளத்திற்கு மழை நீர் செல்ல வரத்து கால்வாய் அமைக்கப் பட்டுள்ளன. பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் அடைப்பட்டுள்ளன. தெப்பக்குளத்தின் வரத்து கால்வாயில் வணிக நிறுவனங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. இதேபோல் அந்த பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயிலும் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் மூடி வழியாக வெளியேறி ரோட்டில் ஓடி தெப்பக்குளத்தில் கலக்கிறது. இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ