சாத்தனியில் குழாய் உடைந்து 15 நாட்களாக வீணாகும் குடிநீர்
இளையான்குடி; இளையான்குடி அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து 15 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது.இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இளையான்குடி பகுதியில் இருந்து சூராணம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் சாத்தனியில் கூட்டுறவு வங்கி எதிர்புறம் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக கால்வாயில் ஓடி வருகிறது. கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.வண்டிகளில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்கி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை உடனடியாக சீரமைத்து குடிநீர் வினியோகம் சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.