உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பலத்த மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

பலத்த மழைக்கு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

காரைக்குடி : காரைக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்த பலத்த மழைக்கு நெற்பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டன. காரைக்குடி தாலுகாவில் சாக்கோட்டையில் 4,500 எக்டேர், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் விவசாயிகள் மானாவாரி, கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்துள்ளனர்.இதற்கு முன் லேசான மழை பெய்ததால், நடவு செய்த நெற்பயிர்கள் உயிரூட்டம் பெற்று, வளர்ந்துவிடும் என விவசாயிகள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அக்., 12 அன்று காலை 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிக பட்சமாக 154 மி.மீ., மழை பதிவானது.அதேபோன்று அக்., 13 அன்று காலை 6:00 மணி நிலவரப்படி 26.20 மி.மீ., மழை பெய்துள்ளது. பலத்த மழைக்கு கழனிவாசல் அருகே கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. குறிப்பாக காரைக்குடி கழனிவாசல் பகுதியில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி, பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.இது குறித்து விவசாயி மகேந்திரன் கூறியதாவது: நெல் பயிரிட்டு ஒரு வாரம் தான் ஆனது. கண்மாய் மடைகள் உரிய பராமரிப்பின்றி, மழை நீர் கண்மாயில் தேங்காமல், நெல் நடவு செய்த வயல்களில் புகுந்துவிட்டது. இதனால், மழை நீரில் நெற்பயிர்கள் மூழ்கி விட்டன. அதலை கண்மாய் மடைகளை சரி செய்யுமாறு பல முறை கோரிக்கை வைத்தும், கண்டு கொள்ளவில்லை. இதனாலேயே மழை நீர் வயல்களில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி