ஆயுதம் சப்ளை செய்தவர் கைது
மானாமதுரை: மானாமதுரையில் ராஜ கம்பீரத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது பாரிஸ் அசன், மணி பாண்டியன் மகன் ஆகாஷ், முனியாண்டி மகன் தினேஷ், முருகபாஞ்சன் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாலமுருகன் ஆகிய 4 பேரை மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஆகாஷ் தகவலின்படி குற்றாலம் அருகே உள்ள வாவா நகர் பகுதியை சேர்ந்த நயினார் 60, என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 24 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.கூடுதல் எஸ்.பி, சுகுமார்கூறியதாவது: மானாமதுரை பகுதியை சேர்ந்த சிலருக்கு இவர் ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்துள்ளார்.மேலும் இவர் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் ஆயுதங்கள் சப்ளை செய்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.