மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவிகள்
13-Oct-2025
சிவகங்கை: சிவகங்கையில் பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 13,126 பயனாளிகளுக்கு ரூ.8.98 கோடிக்கான நலத்திட்டங்களை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். காரைக்குடி ஆவின் நிர்வாகம் சார்பில் பால் உற்பத்தியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன், பால் வளத்துறை கமிஷனர் ஜான்லுாயிஸ் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் தமி ழரசி, மாங்குடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் உதவி பொதுமேலாளர்கள் நாச்சியப்பன், பாண்டிசெல்வி, பால்வளத்துறை துணை பதிவாளர்கள் செல்வம், தனபால் பங்கேற்றனர். பால் உற்பத்தி யாளருக்கு ஊக்கத்தொகை, பால் மாடு பராமரிப்பு கடன், ஆவின் பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு பலன், பால் பரிசோதனை கருவி வழங்குதல் என 13,126 பயனாளிகளுக்கு ரூ.8.98 கோடி மதிப் பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார். காரைக்குடி ஆவின் பொது மேலாளர் ராஜ சேகர் நன்றி கூறினார்.
13-Oct-2025