உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நொறுங்கும் கட்டடம் யாருக்கு துறைகள் மோதலால் தவிப்பு

நொறுங்கும் கட்டடம் யாருக்கு துறைகள் மோதலால் தவிப்பு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டடத்தை உரிமை கொண்டாடும் பிரச்னையில், மாணவர்களின் சீருடைகள் வீதியில் வீசப்பட்டன. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு 1982ல் கட்டப்பட்ட கான்கிரீட் கட்டடம் பழுதடைந்ததால் வேறு கட்டடத்தில் இயங்குகிறது. இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் மாணவர்களுக்கான சீருடைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் கட்டடத்தை சுகாதாரத் துறைக்கு கொடுக்கும்படி அதிகாரிகள் கூறியதால் நேற்று உள்ளே வைக்கப்பட்டிருந்த சீருடைகளை சமூக நலத்துறையினர் வெளியே எடுத்து வந்து மண்தரையில் போட்டனர். பின்னர் தலைமை ஆசிரியர்களை வரச்சொல்லி கொடுத்தனுப்பினர். பள்ளிக்கல்வித் துறைக்கு சொந்தமான கட்டடத்தை வேறு துறைக்கு எப்படி கொடுக்க முடியும் என அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே வட்டார கல்வி அலுவலகத்திற்கு நகரில் சொந்த கட்டடம் இல்லை. இருக்கும் கட்டடத்தையும் வேறு துறைக்கு எப்படி கொடுக்கலாம் என ஆசிரியர்கள் குமுறலுடன் தெரிவித்தனர். கட்டடம் பூச்சு பெயர்ந்து ஆபத்தாக உள்ளதால் பூட்டி வைக்கப்படுவதாக அதிகாரிகள் மழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை